பிரதான செய்திகள்

கிழக்கு மாகாண மட்ட விளையாட்டு போட்டிகள் வேறொரு தினத்திற்கு மாற்றம்

ஒலுவில் தென்கிழக்குப் பல்கலைக் கழக விளையாட்டு மைதானத்தில் இம்மாதம் நடைபெறவிருந்த மாகாண மட்ட விளையாட்டு போட்டிகளை வேறொரு தினத்திற்கு மாற்றம் செய்யுமாறு   விடுத்த கோரிக்கையை கிழக்கு மாகாண ஆளுனர் ஏற்றுக்கொண்டு பிறிதொரு  தினத்தில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை இன்று(13) தெரிவித்தார்.

குறித்த கிழக்கு மாகாண மட்ட விளையாட்டு போட்டிகள் இம்மாதம் 29,30ஆம் திகதிகளில்  தென்கிழக்குப் பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ரமழான் நோன்பு மாத காலத்திலத்தில் குறித்த விளையாட்டுப் போட்டிக்கான பயிற்சிகளை முஸ்லிம்  விளையாட்டு வீரர்களால் மேற்கொள்ள முடியாது என்பதுடன், இக்காலப் பகுதி கடும் உஷ்னமான வெயில்காலமென்பதாலும் விளையாட்டு வீரர்களின் நன்மை கருதி இதனை வேறொரு தினத்தில் நடத்துமாறு கேட்கப்பட்டிருந்தது.

முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சரும், அம்பாறை மாவட்ட  அபிவிருத்தி  ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவருமான  எம்.எஸ். உதுமாலெப்பையினால் விடுக்கப்பட்ட நியாயமான கோரிக்கையை ஏற்று  கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போ கொல்லகம கிழக்கு மாகாண மட்டவிளையாட்டு போட்டியினை குறித்த தினத்தில்  நடத்தாது வேறு ஒரு தினத்தில் நடத்துவதற்கு கிழக்கு மாகாண ஆளுனர் இணக்கம்  தெரிவித்தாக முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர் உதுமாலெப்பை தெரிவித்தார்.
 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment