பிரதான செய்திகள்

கப்பல்துறை நாயகன் அம்பாறை மாவட்டத்தின் சொத்து பொறியியலாளர் மன்சூர் சீனா பயணம்

(றிஜாஸ் அஹமட்)

கட்டார் நாட்டின் கப்பல் உரிமையாளரின் சார்பாக இரண்டு கப்பல்கள் கொள்வனவு செய்வதற்காகவும் அவ்விரு கப்பல்களையும் சீனா நாட்டிற்கு சொந்தமான COSCO Shipyard இல் வைத்து Repairs & Maintenance இற்கான உடன்படிக்கை ஒப்பந்தம் செய்து அவ்விரு கப்பல்களின் திருத்தப் பணிகளை தனது மேற்பார்வையின் கீழ்  திறம்பட செய்து முடிப்பதற்காகவும் பொறியியலாளர் மன்சூர் சீனா நாட்டிற்கு பயணமாகின்றார்.

இவ்விரு கப்பல்களில் ஒரு கப்பலின்  மாலுமியாக பொறியியலாளர் மன்சூர் அவர்களின் வழிகாட்டுதலில் இத்துறையில் வழர்ந்த அக்கரைபற்றை சேர்ந்த Capt. Shiyam Mohamed அவர்களை Energy Midas எனும் குறித்த கப்பலின் மாலுமியாக பொறியியலாளர் மன்சூர் நியமித்துள்ளார்.

தற்போழுது Energy Midas எனும் சரக்கு கப்பல் இந்தோனேசியாவில் இருந்து 77000 MT இடை சரக்குகளை ஏற்றிக்கொண்டு தென் கொரியா நாட்டிற்கு பயணித்துக் கொண்டிருக்கின்றது. தென் கொரியாவில் சரக்குகளை இறக்கிவிட்டு சீனா நாட்டிற்கு அந்த கப்பல் பயணமாகவுள்ளது. மேலும் இந்த கப்பல் 237M நீளமுடையது.

"ஐயா நீர் அடிக்கடி கூறுவீர் இறக்காமத்தில் பிறந்தது எனக்கு பெருமை என்று ஆனால் உன் போன்ற ஒரு லட்சத்தில் ஒரு மகனை பெற்றதற்கு இறக்காமத் தாய் பெருமை கொள்கிறாள்.

எந்த நாட்டிற்கு போனாலும் கேட்கப்படும் முதல் கேள்வி where are you from? என்பதுதான் அதற்கு உம்முடைய பதில் Iam From Irakkamam என்பது அதற்கு பிறகுதான் கேள்வி கேட்டவர் புரிந்து கொள்வார் இலங்கை நாட்டில் தான் இறக்காமம் உள்ளது என்பதனை.

ஒரு நாள் வரும் அந்நாளில் உம்மை நிராகரித்த மக்கள் உம்மை தோழ்களில் சுமப்பர்.  காலம் கழியும் உண்மை ஒளிரும்
 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment