மன்னார் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரியில் சனிக்கிழமை (05) இடம்பெற்ற கௌரவிப்பு நிகழ்வில் 85 மாணவ, மாணவிகள் கௌரவிக்கப்பட்டனர்.
கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சை, க.பொ.த சாதாரண தரம், மற்றும் உயர்தரம் பரீட்சையில் இவர்கள் தோற்றியிருந்தனர்.
மன்னார் எருக்கலம்பிட்டி கிராமத்தைச் சொந்த இடமாகக் கொண்டு நாட்டின் பல்வேறு பாடசலைகளிலும் குறித்த தரங்களில் கல்வி பயின்று இவர்கள் சித்தியடைந்துள்ளனர்.
மன்னார் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரியின் பழைய மாணவர்களின் 'எவரஸ்ட் நண்பர்கள்' அமைப்பின் 75வது பிரிவு குறித்த கௌரவிப்பு நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தது.
மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்விற்கு 'எவரஸ்ட் நண்பர்கள்' அமைப்பின் தலைவர் வைத்திய கலாநிதி. கே.அஷ்வர் தலைமை தாங்கினார்.
இந்நிகழ்வில் ஊடக மத்திய நிலையத்தின் தலைவரும் முன்னாள் தொலைத் தொடர்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சருமான இம்தியாஸ் பாக்கிமாக்கார் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இதேவேளை மலேசிய பல்கலைக்கழக விரிவுரையாளரும், அரச சேவை ஆணைக் குழுவின் உறுப்பினரும், முன்னாள் தென்கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தருமான பேராசிரியர் ஏ.ஐி ஹூசைன் இஸ்மாயில் மற்றும் மன்னார் கல்வி வலயப் பணிப்பாளர் திருமதி சுகந்தி செபஸ்தியான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக்கௌரவிப்பு நிகழ்வில் தேசியக் கல்வி நிறுவகத்தின் விரிவுரையாளர் கலாநிதி எம்.கே.நஜிப்புல்லா, எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரியன் அதிபர் செல்வ ரஞ்சன், மாந்தை உப்புக் கூட்டுத்தாபணத்தின் தலைவர் என்.எம்.அமீன், மன்னார் வலயக் கல்வித் திணைக்கள அதிகாரிகள், பழைய மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் உள்ளடங்களாக பலரும் கலந்து கொண்டனர்
.
இந்நிகழ்வில் அதிதிகளாக கலந்து கொண்ட தேசிய ஊடக நிலையத்தின் தலைவர் இம்தியாஸ் பாக்கிமாக்கார், மன்னார் கல்வி வலயப் பணிப்பாளர் திருமதி சுகந்தி செபஸ்தியான் மற்றும் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரியன் அதிபர் செல்வ ரஞ்சன், ஆகியோருக்கு 'உண்மையான இலங்கையர்' ('ருத் ஸ்ரீலங்கா') எனும் ஞாபகார்த்த நிணைவுச் சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment