அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 3வது அமர்வு எதிர்வரும் வியாழக்கிழமை (10) காலை 9.30மணிக்கு தவிசாளர் ஏ.எல்.அமானுல்லா தலைமையில் பிரதேச சபை கூட்ட மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
மேற்படி அமர்வுக்கு சகல உறுப்பினர்களுக்குமான அழைப்பினை பிரதேச சபையின் செயலாளர் எம்.ஐ.முஹம்மட் பாயிஸ் விடுத்துள்ளார்.
குறித்த தினம் நடைபெறவுள்ள அமர்வின் போது 2018 ஏப்ரல் மாத கூட்டறிக்கைக்கான அங்கீகாரம் பெறல், சபையின் நிதி அதிகாரத்தினை தவிசாளருக்கு வழங்குதல், உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட வலுவூட்டல் வேலைத்திட்டம் தொடர்பாக தீர்மானம் மெற்கொள்ளல், அஸ்ரப் ஞாபகார்த்த பொது விளையாட்டு மைதான வடக்கு வீதி அபிவிருத்தி தொடர்பாக ஆராய்தல், உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட மூலதன அபிவிருத்தி வேலைத்திட்டம் தொடர்பாகவும் தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளது.
அத்துடன், திண்மக்கழிவு முகாமைத்துவ வேலைக்கு தொழிலாளர்களை நியமித்தல், பிரதேச சபை கூட்ட மண்டபத்திற்கு ஒலி பெருக்கி சாதன வசதிகளை ஏற்படுத்தல், பொதுமக்களின் முறைப்பாடுகள், கோரிக்கைகள் தொடர்பாக ஆராய்தல், பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்ட தீர்மாணங்களை ஆராய்தல், பிரதேச சபை உறுப்பினர்களின் பிரேரணைகள் தொடர்பாக ஆராய்தல் என இன்னும் பல முக்கிய விடயங்கள் தொடர்பாகவும் இதன்போது ஆராயப்படவுள்ளது.

0 comments:
Post a Comment