அட்டாளைச்சேனை பிரதேச மட்ட விளையாட்டுப் போட்டியின் மெய்வல்லுநர் போட்டிகள் மற்றும் பரிசளிப்பு நிகழ்வுகள் என்பன எதிர்வரும் 13ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தென்கிழக்கு பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் கோலாகலமாக இடம்பெறவுள்ளதாக அட்டாளைச்சேனை பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர் ஏ.எம்.எம். றசீன் தெரிவித்தார்.
மேற்படி விளையாட்டுப் போட்டிக்கான சகல ஏற்பாடுகளும் நடைபெற்று வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ரீ.ஜே.அதிசயராஜ் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.நசீர் பிரதம அதிதியாகவும், கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும், அம்பாரை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவருமான எம்.எஸ்.உதுமாலெப்பை கௌரவ அதிதியாகவும், கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எல்.அமானுல்லா மற்றும் பிரதி தவிசாளர் எம்.எஸ்.எம்.ஜஃபர் ஆகியோர் விசேட அதிதிகளாகவும், அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்கள், அம்பாரை மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.அமீர் அலி மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அதிதிகளாக கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
இதன்போது அட்டாளைச்சேனை பிரதேசத்திலுள்ள விளையாட்டுக் கழகங்களின் தலைவர்கள், செயலாளர்கள்,மற்றும் உறுப்பினர்கள், பொதுமக்கள், ஆதரவாலர்கள் என பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.
அட்டாளைச்சேனை பிரதேச விளையாட்டுப் போட்டியில் குழுப் போட்டிகள் மற்றும் மெய்வல்லுநர் போட்டிகளில் வெற்றிபெற்ற மற்றும் திறமைகளை வெளிப்படுத்திய வீரர்களுக்கு இதன்போது வெற்றிக் கிண்ணங்கள், சான்றுதழ்கள் என்பன வழங்கி கௌரவிக்கப்படவுள்ளதாகவும் விளையாட்டு உத்தியோகத்தர் றசீன் தெரிவித்தார்.

0 comments:
Post a Comment