பிரதான செய்திகள்

கல்முனை மாநகர சபைக்கு பிளாஸ்ட்ரிக் அரிக்கும் இயந்திரம் கையளிப்பு..!

(அஸ்லம் எஸ்.மௌலானா)

திண்மக் கழிவகற்றலை இலகுபடுத்தும் பொருட்டு கல்முனை மாநகர சபையின் மீள்சுழற்சி நிலையத்திற்கு பிளாஸ்ட்ரிக் அரிக்கும் இயந்திரம் ஒன்று கிழக்கு மாகாண சபை உள்ளூராட்சித் திணைக்களத்தினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இதனைக் கையளித்து அறிமுகப்படுத்தும் நிகழ்வு இன்று (5) சனிக்கிழமை கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ.எம்.றகீப், மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி ஆகியோரின் பங்கேற்புடன் நடைபெற்றது.

குறித்தொதுக்கப்பட்ட மாகாண அபிவிருத்தி நன்கொடை வேலைத் திட்டத்தின் கீழ் (PSDG) இவ்வியந்திரம் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் இதன் பயன்பாட்டினால் கல்முனை மாநகர சபை எதிர்நோக்கி வருகின்ற திண்மக் கழிவகற்றல் பிரச்சினையை ஓரளவு குறைக்க முடியும் எனவும் ஆணையாளர் ஜே.லியாகத் அலி தெரிவித்தார்.

தமது வீடுகளில் அன்றாடம் சேர்கின்ற திண்மக் கழிவுகளை வகைப்படுத்தி, பிளாஸ்ட்ரிக் பொருட்களை வேறாக ஒப்படைப்பதன் மூலம் இத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு பொது மக்களிடம் ஆணையாளர் வேண்டுகோள் விடுக்கின்றார்.

எதிர்காலங்களில் பிளாஸ்ட்ரிக் பாகங்களை பொது மக்களிடம் இருந்து எமது மாநகர சபையினால் விலைக்கு வாங்குவதற்கும் அவற்றை எமது மீள்சுழற்சி நிலையத்தில் இவ்வியந்திரத்தின் மூலம் பிளாஸ்ட்ரிக் தூள்களாக பொதி செய்து சந்தைப்படுத்துவதற்கும் எதிர்பார்ப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.


 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment