பிரதான செய்திகள்

கல்முனை பிராந்திய மத்ரஸா மாணவர்களிடையே “Rowlathul wildhan” குர்- ஆன் மற்றும் அதான் போட்டி

(முஹம்மட் அஜ்வத்)

எதிர்வரும் ரமலான் மாதத்தினை முன்னிட்டு அம்மாதத்தினை செழுமைப்படுத்தும் நோக்கில் கல்முனை பிராந்திய மத்ரஸா மாணவ மாணவிகளிடையேயான “Rowlathul wildhan” சுவனத்து சிறுவர்கள் - 2018 நிகழ்ச்சியின் ஓர் அங்கமாக மாபெரும் “அல்குர்ஆன் மற்றும் அதான்” போட்டியினை நடாத்த கல்முனை மிஸ்பாஹுல் ஹுதா பவுண்டேசனினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.   

கிராஅத் (Qirath) மற்றும் அதான் எனும் இரு பிரிவுகளாக நடைபெறவிருக்கும் இந்நிகழ்வானது எதிர்வரும் மே மாதம் 25 ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 6ஆம் திகதி வரை நடைபெறவிருக்கின்றது. இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுமார் 25 மத்ரஸாக்களினை பிரதிநித்துவப்படுத்தி 200 க்கும் மேட்பட்ட மாணவ மாணவிகள் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். 

இதன் இறுதி  (Grand Final) நிகழ்வானது எதிர்வரும் ஜூன் மாதம் 6ஆம் திகதி தலை சிறந்த உலமாக்கள் முன்னிலையில் திறந்த வெளியில் வெகு சிறப்பாக நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் கலந்து கொள்ளும் மாணவ மாணவிகள் மற்றும் அவர்களினை பிரதிநிதித்துவப்படுத்தும் மத்ரஸாக்களுக்கு பரிசில்கள் மற்றும் சான்றிதழ்களும் வெற்றி பெரும் மாணவ மாணவிகளுக்கு பெறுமதியான பரிசில்கள் மற்றும் நினைவுச் சின்னங்களும் வழங்கப்படவிருக்கின்றமை குறிப்பிட தக்கதாகும்.     

மேலதிக விபரங்களுக்கு 075 7302405, 077 7855411 எனும் இலக்கத்தினை தொடர்பு கொள்ளவும். 

இவ்வண்ணம் .
ஏற்பாட்டுக்குழு,
மிஸ்பாஹுல் ஹுதா பவுண்டேசன்.
அல் மஸ்ஜிதுல் ரஹ்மான் – கல்முனை
 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment