இலங்கையில் வெங்காய உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும் முயற்சியாகவே KOPIA நிறுவனத்தால் இப்பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
KOPIA நிறுவனத்தால் 2015 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை இலங்கையில் துறைசார்ந்த பயிர்களின் ஆய்வுகள் மற்றும் அபிவிருத்தி (FCRDF) நிறுவனமும் இணைந்து உள்நாட்டில் வெங்காய உற்பத்தியை அபிவிருத்தி செய்ய பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
புதிய கொரிய விவசாய தொழில்நுட்ப முறைகளை அறிமுகம் செய்து, உள்ளூர் வெங்காயம் உற்பத்தி செய்யும் விவசாயிகளின் நிலைமையை மேம்படுத்துவதன் மூலம், இலங்கையில் வெங்காய உற்பத்தியை அதிகரிக்கச் செய்வதே இத் திட்டத்தின் நோக்கமாகும்.
இதன் ஒரு பகுதியாக வெங்காய உற்பத்தியை அடிப்படையாகக் கொண்டு மாதிரிக் கிராமமொன்றை அமைக்க KOPIA நிறுவனம் முன்வந்துள்ளது.
இக் கிராம மக்களுக்கு தங்களது பயிர்ச்செய்கை நடவடிக்கைகளை இலகுவாகவும், முறையாகவும் மேற்கொள்ள தேவையான வசதிகளை KOPIA நிறுவனம் எற்படுத்திக் கொடுத்துள்ளது. அங்கு விவசாய இரசாயன பதார்த்தங்களை வழங்கல், களஞ்சிய வசதிகளை அளித்தல், மழைக்கான பாதுகாப்பை வழங்கல், துளி நீர் வழங்கல் பிரிவொன்றை அமைத்தல், தாய் தாவர உற்பத்திக்கான வசதிகளை வழங்குவதுடன் விவசாயிகளின் அனுபவத்தை பரிமாறிக்கொள்ளும் நிகழ்ச்சித் திட்டங்கள் மற்றும் பல பயிற்சித் திட்டங்கள் KOPIA நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.
இத்திட்டத்தின் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட பயிற்சிப் பட்டறையில் பங்குபற்றிய 100 விவசாயிகள் வர்த்தக ரீதியான வெங்காய விதை உற்பத்தியை ஏற்கனவே ஆரம்பித்துள்ளதுடன் அவர்களுக்கு இத் துறையில் ஏற்படக்கூடிய பல சவால்கள் தொடர்பாக சரியான புரிந்துணர்வை பெற்றுக் கொடுக்கவே இப்பயிற்சிப் பட்டறை ஏற்பாடு செய்யப்பட்டது.
அதற்காக தெரிவுசெய்யப்பட்ட 25 ஹெக்டயர் காணியுடனான விவசாயப் பண்ணை உரிமையாளர் வர்த்தக விவசாய உற்பத்திகள் தொடர்பாக 30 வருட அனுபவம் உடையவராவார். இந்த பயிற்சிப் பட்டறை மூலம் இலங்கையின் KOPIA நிறுவனத் தலைவர் கலாநிதி சொய்யும், வெங்காய விதை உற்பத்தி தொடர்பான கொரிய நிபுணர் கலாநிதி லீயும் கலந்துகொண்டனர்.
உள்ளூரில் ஏற்பாடு செய்யப்படும் இவ்வாறான திட்டங்களுக்கு மேலதிகமாக 2018 மே மாத நடுப்பகுதியில் மாதிரிக் கிராமங்கள் இரண்டிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட 10 விவசாயிகள் மற்றும் விவசாயத் திணைக்கள ஆய்வு அதிகாரிகள் இருவருக்கு கொரியாவில் நடைபெறும் பயிற்சி திட்டத்தில் கலந்துகொள்ளும் சந்தர்ப்பத்தையும் KOPIA நிறுவனம் வழங்கவுள்ளது.

0 comments:
Post a Comment