புனித ரமழான் மாதத்தை சிறப்பிக்கும் வகையில் அட்டாளைச்சேனை அல் - இபாதா கலாசார மன்றம் ஏற்பாடு செய்துள்ள ஹதீஸ் மஜ்லீஸ் நிகழ்வு அட்டாளைச்சேனை பெரிய பாலத்தடி முன்றலில் இடம்பெற்று வருகிறது.
இந்நிகழ்வானது ரமழான் மாதம் வெள்ளிக்கிழமை தவிர்ந்த ஏனைய நாட்களில் காலை 10.00மணி முதல் நண்பகல் 12.00மணி வரை இடம்பெற்று வருகிறது. இந்நிகழ்வில் பிரசித்தி பெற்ற மார்க்க அறிஞர்கள் கலந்துகொண்டு மார்க்க சொற்பொழிவு நிகழ்த்துகின்றனர்.
மேற்படி ஹதீஸ் மஜ்லிஸ் நிகழ்வில் எதிர்வரும் 26ஆம் திகதி சனிக்கிழமை அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமாவின் பத்துவாக்குழு உறுப்பினர் அஷ்ஷேஹ் ஏ.எல்.யஹ்யா (பலாஹி) அல்-குர்ஆனும் நாமும் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தவுள்ளார்.
எதிர்வரும் 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி அமீர் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் இன்றுள்ள பாடங்களும், இனியுள்ள கடமைகளும் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தவுள்ளார்.
எதிர்வரும் 29ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காத்தான்குடி மனார் அறிவியல் கல்லூரி பனிப்பாளர் அஷ்ஷேஹ் ஏ.எம்.அக்ரம் (நழிமி) இறைவாக்குறுதிகளும், நமது நிலைப்பாடும் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தவுள்ளார்.
அட்டாளைச்சேனை அல் - இபாதா கலாசார மன்றம் கடந்த 7வருட காலமாக ஹதீஸ் மஜ்லீஸ் நிகழ்வினை மிகவும் சிறப்பாக நடாத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment