ஏறாவூர் நகர சபையில் தீயணைப்பு பிரிவு ஒன்றினை ஏற்படுத்துவதற்கான ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறு மாகாண சபைகள், உள்ளுராட்சி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா தனது அமைச்சின் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஏறாவூர் நகர சபைக்கு தீயணைப்பு கருவிகள் உட்பட சகல வசதிகளையும் கொண்ட தீயணைப்பு பிரிவொன்றை ஏற்படுத்தித் தருமாறு கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும். ஏறாவூர் நகர சபை உறுப்பினருமான எம்.எஸ்.சுபையிர் அமைச்சர் பைசர் முஸ்தபாவிடம் அண்மையில் கோரிக்கை விடுத்திருந்தார்.
அதிக மக்கள் செறிந்து வாழும் ஏறாவூர் பிரதேசத்தில் அதிகமான வர்த்தக நிலையங்கள், வீடுகள், தொழிற்சாலைகள், மர ஆலைகள், அரசி ஆலைகள் என்பன காணப்படுவதாகவும். இப்பிரதேசத்தில் பல தீ விபத்துச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாகவும் அவர் அமைச்சர் பைசர் முஸ்தபாவிடம் சுட்டிக்காட்டினார்.
மேற்குறித்த கோரிக்கையினை ஏற்றுக்கொண்ட அமைச்சர் பைசர் முஸ்தபா ஏறாவூர் நகர சபையில் தீயணைப்பு பிரிவொன்றினை ஏற்படுத்துவதற்கு உதவுவதாக கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும். ஏறாவூர் நகர சபை உறுப்பினருமான எம்.எஸ்.சுபையிரிடம் உறுதியளித்தார்.
இதற்கினங்க அமைச்சர் பைசர் முஸ்தபா ஏறாவூர் நகர சபையில் தீயணைப்பு பிரிவொன்றை ஏற்படுத்தும் பொருட்டு தனது அமைச்சின் செயளாளரை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளார்.

0 comments:
Post a Comment