பிரதான செய்திகள்

அல்-நஜா விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் கோணாவத்தை ஜூம்ஆ பள்ளிவாசலில் சிரமதானம்

புனித ரமழான் மாத்தினை முன்னிட்டு அட்டாளைச்சேனை அல்-நஜா விளையாட்டுக் கழகத்தின் உறுப்பினர்களினால் இன்று (16) கோணாவத்தை ஜூம்ஆ பள்ளிவாசல் வளாகம் சிரமதானம் செய்யப்பட்டது.

அல்-நஜா விளையாட்டுக் கழகத்தின் கலாசார குழு இந்த சிரமதான நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 மேற்படி கழகத்தின் கலாசார குழு தலைவர் என்.இஜாஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கழகத்தின் தலைவர் எஸ்.எம்.இத்ரீஸ், செயலாளர் ஏ.எல்.றிம்சான், அமைப்பாளர் எப்.ஏ.ஹலீம், பொருளாளர் எச்.எம்.இஸ்ஸதீன், முகாமையாளர் ஏ.அஸ்வர் உட்பட கழக வீரர்கள் பலர் கலந்துகொண்டு சிரமதானப் பணியில் ஈடுபட்டனர்.

அல்-நஜா விளையாட்டுக் கழகம் தனது செயற்பாட்டினை விளையாட்டுடன் மாத்திரம் மட்டுப்படுத்தாது, அட்டாளைச்சேனை பிரதேசத்தில கல்வி, கலாசார மற்றும் சமூக சேவை என பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இக்கழகத்தின் சகல செயற்திட்டங்களையும் சிறப்பாக முன்னெடுப்பதற்கு கழகத்தின் மூத்த வீரர்கள் உட்பட கழகத்தின் ஆலோசகர்கள், ஆதரவாலர்கள் பெரும் பங்களிப்புக்களை செய்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.



 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment