(றியாஸ் ஆதம்)
அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிராம சேவகர் பிரிவுகளுக்கிடையில் நடைபெற்ற 2018ஆம் ஆண்டுக்கான விளையாட்டுப் போட்டியில் அட்டாளைச்சேனை 14ஆம் பிரிவு சம்பியனாக தெரிவாகியுள்ளது.
அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிராம சேவகர் பிரிவுகளுக்கிடையில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியின் மெய்வல்லுநர் போட்டிகள் மற்றும் பரிசளிப்பு நிகழ்வு என்பன நேற்று (13) தென்கிழக்கு பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
மெய்வல்லுநர் போட்டியில் 13பதக்கங்களைப் பெற்று அட்டாளைச்சேனை 14ஆம் பிரிவு முதலாமிடத்தினையும், 10பதக்கங்களை பெற்று அட்டாளைச்சேனை 7ஆம் பிரிவு இரண்டாமிடத்தினையும், 4பதக்கங்களை பெற்று அட்டாளைச்சேனை 8ஆம் பிரிவு மூன்றாமிடத்தினையும் பெற்றுக்கொண்டது.
மேற்படி விளையாட்டுப் போட்டியின் குழுப் போட்டிகள் மற்றும் மெய்வல்லுநர் போட்டிகளின் அடிப்படையில் அட்டாளைச்சேனை 14ஆம் பிரிவு முதலாமிடத்தினையும், அட்டாளைச்சேனை 7ஆம் பிரிவு இரண்டாமிடத்தினையும், அட்டாளைச்சேனை 8ஆம் பிரிவு மூன்றாமிடத்தினையும் பெற்றுக்கொண்டது.
அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ரீ.ஜே.அதிசயராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.நசீர் பிரதம அதிதியாகவும், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எல்.அமானுல்லா மற்றும் பிரதி தவிசாளர் எம்.எஸ்.எம்.ஜஃபர் ஆகியோர் விசேட அதிதிகளாகவும், அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களான ரீ.ஆப்தீன் மற்றும் ஏ,பீ.பதுறுதீன், தென்கிழக்கு பல்கலைக்கழக உடற்கல்வித்துறை பணிப்பாளர் ஐ.எம்.கதாபி ஆகியோர் அதிதிகளாகவும் கலந்து சிறப்பித்தனர்.
இதன்போது அட்டாளைச்சேனை பிரதேச செயலக கிராம உத்தியோகத்தர்கள், சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அட்டாளைச்சேனை பிரதேசத்திலுள்ள விளையாட்டுக் கழகங்களின் தலைவர்கள், செயலாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
அட்டாளைச்சேனை பிரதேச விளையாட்டுப் போட்டியில் குழுப் போட்டிகள் மற்றும் மெய்வல்லுநர் போட்டிகளில் வெற்றிபெற்ற மற்றும் திறமைகளை வெளிப்படுத்திய வீரர்களுக்கு இதன்போது வெற்றிக் கிண்ணங்கள், சான்றுதழ்கள் என்பன வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment