(றியாஸ் ஆதம்)
இயற்கை வளம் பொருந்திய கோணாவத்தை ஆற்றினை சுத்தமாக வைத்திக்கும் நோக்கிலும், கோணவத்தை ஆற்றின் இரு மருங்கிலும் உள்ள காணிகளை சுவீகரிக்கம் நடவடிக்கையினை தடுக்கும் பொருட்டும், ஆற்றின் ‘இயற்கைச் சூழலை பாதுகாத்தல் எனும் தொனிப்பொளில் நேற்று (12) கோணவத்தை ஆற்றை அண்டியுள்ள பகுதிகளில் சிரமதானம் செய்யப்பட்டது.
அட்டாளைச்சேனை அல்-இபாதா கலாசார பேரவை மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச செயலகம், அட்டாளைச்சேனை பிரதேச சபை, பிராந்திய நீர்ப்பாசன திணைக்களம், அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் என்பன இணைந்து கூட்டாக இந்த சிரமதான நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் அல்-இபாதா கலாசார பேரவையின் போசகரும், முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சருமான எம்.எஸ்.உதுமாலெப்பை, அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் ஏ.எல்.அமானுல்லா, பிரதி தவிசாளர் எம்.எஸ்.எம்.ஜஃபர், பிரதேச செயலாளர் ரீ.ஜே.அதிசயராஜ், நீர்ப்பாசன பொறியியலாளர் ஐ.மயூரன், பிரதேச காதார வைத்திய அதிகாரி ஏ.எல்.அலாவுதீன், பிரதேச சபை செயலாளர் எம்.ஐ.எம்.பாயிஸ், உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஐ.எல்.தௌபீக், கிராம உத்தியோகத்தர்கள், சமூர்த்தி உத்தியோகத்தர்கள், பொருளாதா அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொதுச்சுகாதார பரிசோதகர்கள் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது கோணவத்தை ஆற்றின் இரு மருங்கிலும் உள்ள காணிகளை சுவீகரிக்கும் நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட்டதுடன், ஆற்றின் இயற்கைச் சூழலை பாதுகாக்கும் பொருட்டும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதன்போது பொலிசார், பொதுச்சுகாதார பரிசோதகர்கள், திணைக்களத் தலைவர்கள் வீடுவீடாகச் சென்று விளக்கமளித்தனர்.
அண்மைக்காலமாக கோணவத்தை ஆற்றின் இரு பகுதிகளிலும், குப்பைகள் போடப்படுவதாகவும், ஆற்றின் இரு மருங்கிலும் உள்ள காணிகளை சுவீகரிக்கப்படுவதாகவும், அந்தப் பகுதியில் டெங்கு நோய் பரவக்கூடிய அபாயம் காணப்படுவதாகவும் பொதுமக்களினால் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்தே இச்சிரமதான நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
அட்டாளைச்சேனை பிரதேசத்தில் சுமார் 15கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கியதாக அமைந்துள்ள கோணாவத்தை ஆற்றினை கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பையின் முயற்சியினால் எல்லையிடப்பட்டு அழகுபடுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

0 comments:
Post a Comment