அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் ஸ்தாபர் தின நிகழ்வு (FOUNDERS’ DAY COMMMEMORATION) நேற்று (30) அகில இலங்கை வை.எம்.எம்.ஏ.பேரவையின் கொழும்பு தலைமைக் காரியாலயத்தின் டாக்டர் ஏ.எம்.ஏ.அஸீஸ் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
அகில இலங்கை வை.எம்.எம்.ஏ.பேரவையின் தேசியத் தலைவர் தேசப்பந்து எம்.என்.எம்.நபீல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அகில இலங்கை வை.எம்.எம்.ஏ.பேரவையின் ஆளுநர் சபையின் தவிசாளர் எம்.எப்.எஸ்.முஹீட் கலந்து கொண்டு அகில இலங்கை வை.எம்.எம்.ஏ.பேரவை ஆரம்பிக்கப்பட்ட ஸ்தாபர்கள் தொடர்பாகவும் இதன் செயற்றிட்டங்கள் பற்றியும் பல்வேறுபட்ட விளக்கங்களை இங்கு முன்வைத்ததுடன் ஸ்தாபர்கள் நினைவாக மௌலவி அல்-ஹாபிழ் அப்துல் மாஜீதினால்(மதனி) விசேட துஆப் பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிகழ்வில் அகில இலங்கை வை.எம்.எம்.ஏ.பேரவையின் தேசிய பொதுச் செயலாளரும் அமைச்சர் பைசர் முஸ்தபாவின் ஆலோசகருமான சஹீட் எம் றிஸ்மி ,உப செயலாளர் எம்.ஐ.உதுமாலெப்பை உட்பட அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் பதவி வழி உத்தியோகத்தர்கள் முன்னாள் தலைவர்கள் மாவட்டப் பணிப்பாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
அகில இலங்கை வை.எம்.எம்.ஏ.பேரவை 1950 ஆம் ஆண்டு டாக்டர் ஏ.எம்.ஏ.அஸீஸினால் ஆரம்பிக்கப்பட்டு இன்று வரை சிறந்த முறையில் பல தலைவர்களைக் கொண்டு இயங்கி வந்தமையும் வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

0 comments:
Post a Comment