பிணை நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளாமையால் நேற்றைய தினம் (16) விளக்கமறியலில் வைக்கப்பட்ட மஹிந்தானந்தவுக்கு இன்று பிணை வழங்கப்பட்டுள்ளது.
2014ஆம் ஆண்டு விளையாட்டுத்துறை அமைச்சராக இவர் பதவி வகித்த காலத்தில் கரம் போர்டுகளை கொள்வனவு செய்து, 39 மில்லியன் நிதியை அரசாங்கத்துக்கு நட்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில் இவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.
இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக முன்னாள் அமைச்சர் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலையான போதே நேற்று கைது செய்யப்பட்டிருந்தார்.
நேற்றைய தினம் அவரது வெளிநாட்டு பயணங்களுக்கும் நீதவான் தடைவிதித்ததுடன், அவரது வெளிநாட்டு கடவுச்சீட்டை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டார்.
எனினும், நீதிமன்ற பிணை நிபந்தனைகளை நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே ஒப்புக்கொள்ள மறுத்ததால்,அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment