பிரதான செய்திகள்

மாவட்ட மட்ட கிரிக்கட் போட்டியில் அட்டாளைச்சேனை பிரதேச அணி சம்பியனாக தெரிவு

(றியாஸ் ஆதம்)

அம்பாரை மாவட்ட பிரதேசங்களுக்கிடையில் நடைபெற்றுவரும் மாவட்ட மட்ட விளையாட்டுப் போட்டியின் கிரிக்கட் போட்டியில் அட்டாளைச்சேனை பிரதேச செயலக அணி வெற்றிபெற்று சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.

மாவட்ட மட்ட கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி (15) பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. இறுதிப் போட்டியில் அட்டாளைச்சேனை மற்றும் அக்கரைப்பற்று பிரதேச அணிகள் மோதிக்கொண்டன.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அட்டாளைச்சேனைப் பிரதேச அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது. இதற்கினங்க அக்கரைப்பற்று பிரதேச அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

முதலில் துடுப்பெடுத்தாடிய அக்கரைப்பற்று பிரதேச அணியினர் 9.3 ஓவரில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 76 ஓட்டங்களைப் பெற்றனர். இதன்போது சாஜித் 45 ஓட்டங்களை தனது அணிக்காகப் பெற்றுக்கொடுத்தார். இதன்போது அட்டாளைச்சேனை அணி சார்பாக பந்து வீசிய சாகீர் தனது இறுதி ஓவரில் ஹெற்றிக் சாதனையினையும் நிகழ்த்தி மொத்தமாக 4விக்கட்டுக்களையும் பெற்றுகொண்டார்.

77ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய அட்டாளைச்சேனைப் பிரதேச அணியினர் 9.3 ஓவர்களில் 6 விக்கட்டுக்களை இழந்து 77 ஓட்டங்களைப் பெற்று வெற்றியினை தனதாக்கிக் கொண்டனர். அட்டாளைச்சேனை அணி சார்பாக அக்ரம் 29ஓட்டங்களை அந்த அணிக்காக பெற்றுக்கொடுத்தார்.

இப்போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் மாகாண மட்டப் போட்டியிற்கு அம்பாறை மாவட்டம் சார்பாக அட்டாளைச்சேனை பிரதேச அணியினர் தெரிவு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment