பிரதான செய்திகள்

கல்முனை மாநகர சபைக்கு புதிய கட்டடம்

கல்முனை மாநகர சபைக்கு 300 மில்லியன் ரூபாய் செலவில் அனைத்து வசதிகளையும் கொண்ட புதிய கட்டடத் தொகுதியை அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் இரண்டு மாதங்களில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் நிர்மாணப் பணிகள் ஆரம்பித்து வைக்கப்படும் எனவும், கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ.எம்.றக்கீப் தெரிவித்தார்.

கல்முனை மாநகர சபையின் புதிய முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டதைத் தொடர்ந்து, மாநகர சபைக்கு இன்று (5) விஜயம் செய்து, உத்தியோகத்தர்களை சந்தித்துக் கலந்துரையாடியபோதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மிகவும் பழைமை வாய்ந்த கட்டடத்தில் இயங்கி வருகின்ற கல்முனை மாநகர சபைக்கு, புதிய கட்டடம் அமைக்கப்பட வேண்டும் என்ற ஆதங்கம் எல்லோரிடமும் இருந்து வருகின்றது. இதனை எனது பதவிக் காலத்தில் நிறைவேற்றிவிட வேண்டும் என்கிற ஆர்வத்தில் நான் இருக்கிறேன். இதற்கான நடவடிக்கைகளை, பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ், ஏற்கெனவே மேற்கொண்டிருக்கிறார்.

அவரது வேண்டுகோளின் பேரில், நகர திட்டமிடல் அமைச்சால் 300 மில்லியன் ரூபாய் நிதியை, எமது கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் ஒதுக்கீடு செய்துள்ளார். இதன் பேரில் புதிய கட்டடத் தொகுதிக்கான வரைபடமும் தயார் செய்யப்பட்டிருக்கிறது. இரண்டு மாதங்களில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பங்கேற்புடன் நிர்மாணப் பணிகளை ஆரம்பிப்பதற்குத் தீர்மானித்துள்ளோம் என்றார்.

கல்முனை நகர மண்டபம், மருதமுனை மக்கள் மண்டபம் என்பவற்றை மக்கள் பாவனைக்கு விடுவதற்கும் அவசர நடவடிக்கைகள் மேற்கொள்வதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment