வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச சபையின் முதலாவது அமர்வு உள்ளுராட்சி ஆணையாளர் எம்.வை. சலீம் தலைமையில் இன்று (6) இடம்பெற்றது.
சபையின் தவிசாளரக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியைச் சேர்ந்த திருமதி என். ஸாபா ஜெயரஞ்சித், உப தவிசாளராக ஸ்ரீ லங்கா சுதந்திரகட்சியைச் சேர்ந்த தர்மலிங்கம் யசோதரன் ஆகியயோர் தெரிவு செய்யப்பட்டனர்
உப தவிசாளர் தெரிவின் போது ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சினை சேர்ந்த தர்மலிங்கம் யசோதரன் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கனகரெட்ணம் கமலநேசன் ஆகியோரது பெயர் முன்மொழியப்பட்டது.
இதன்போது ஸ்ரீ லங்கா சுதந்திரகட்சியின் தர்மலிங்கம் யசோதரன் 12 வாக்குகளையும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கணகரெட்ணம் கமலநேசன் 9வாக்குகளையும் பெற்றனர்.

0 comments:
Post a Comment