பிரதான செய்திகள்

கல்முனை மாநகர சபையின் முதல் மாதாந்த அமர்வு நாளை..!

(அஸ்லம் எஸ்.மௌலானா)

கல்முனை மாநகர சபையின் முதலாவது மாதாந்த சபை அமர்வு நாளை வியாழக்கிழமை 10.00 மணி தொடக்கம் மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் மாநகர சபா மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இந்த அமர்வில் மாநகர சபை உறுப்பினர்களின் கன்னியுரைகள் இடம்பெறவிருப்பதுடன் சபைக்கான பத்து நிலையியல் குழுக்களும் தெரிவு செய்யப்படவுள்ளன என்று மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி தெரிவித்தார்.

நிதி நிலையியல் குழு, சுகாதார மற்றும் திண்மக்கழிவகற்றல் குழு, வாகனப் பராமரிப்புக் குழு, அபிவிருத்தி திட்டமிடல் குழு, சந்தைகள் மற்றும் கடைத்தொகுதி அபிவிருத்திக் குழு, பொது வசதிகள் மற்றும் நலன்புரிக் குழு, விளையாட்டு அபிவிருத்திக் குழு, வீதி விளக்கு பராமரிப்புக் குழு, கல்வி, கலாசார அபிவிருத்திக் குழு, அனர்த்த முகாமைத்துவக் குழு என்பனவே இவ்வாறு தெரிவு செய்யப்படவுள்ளன.

அத்துடன் காசோலைகளிலும் கட்டளைகளிலும் கையொப்பமிடுவதற்கு தெரிவான உத்தியோகத்தர்களுக்கு அதிகாரமளிக்கும் தீர்மானத்தை அங்கீகரித்தல் உள்ளிட்ட விடயங்களும் நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment