(றியாஸ் இஸ்மாயில்)
அட்டாளைச்சேனைப் பிரதேச சபையின் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் அட்டாளைச்சேனைப் பிரதேச சபையில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றி (பொதுமக்கள் தொடர்பாடல் உத்தியோகத்தர்) இடமாற்றம் பெற்றுச் செல்லும் மௌலவி எம்.எச்.றியாழ்லுக்கான பிரியாவிடை நிகழ்வும், சேவைநலன் பாராட்டும் இன்று(25) பிரதேச சபையின் வளாகத்தில் செயலாளர் எம்.ஐ.எம்.பாயிஸ் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எல்.அமானுல்லாஹ் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
இதன் போது இடம்மாற்றம் பெற்றுச் செல்லும் உத்தியோகத்தரின் அர்ப்பணிப்புடனான சேவைகள் தொடர்பாக உத்தியோகத்தர்கள் உட்பட நிதியாளர் ஏ.எம்.இர்பான் பிரதேச சபை உறுப்பினர் சட்டத்தரணி எம்.ஏ.அன்சில் தவிசாளர் ஏ.எல்.அமானுல்லாஹ் ஆகியோர் உரையாற்றினர்.
இதன்போது தவிசாளர் ஏ.எல்.அமானுல்லாஹ்வுடன் இணைந்து பிரதேச சபை உறுப்பினர்கள் இடமாற்றம் பெற்றுச் செல்லும் உத்தியோகத்தர் மௌலவி எம்.எச்.றியாழ் அவர்களுக்கு பரிசுப் பொருள் வழங்கி கௌரவித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நிகழ்வில் பிரதேச சபையின் உறுப்பினர்கள் அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

0 comments:
Post a Comment