அவர் மேலும் தெரிவிக்கையில்,
1994 களில் விஜயதுங்க அதேபோன்று சந்திரிக்கா அம்மையார் ஆகியோர் ஹெலிகொப்டர்களை அனுப்பி ஆட்சி அமைப்பதற்கு கொழும்புக்கு தலைவர் மர்ஹூம் அஸ்ரப் அவர்களை அழைத்தபோது,
அம்பாறை மாவட்டத்தில் சிங்கள சமூகத்தின் சனப்பரம்பலை அதிகரிப்பதற்காக ஊவா மாகாணத்திலிருந்தும் மலைநாட்டிலிருந்தும் சுமார் 30 ஆயிரம் குடும்பங்களை அம்பாறை மாவட்டத்தோடு இணைத்தமை தவறு, அதனை உடனே அல்லது குறிப்பிட்ட காலத்துக்குள் திருத்தம் கொண்டுவரப்பட்டு ஏலவே அம்பாறைமாவட்டத்தில் இருந்த சனப்பரம்பலை உறுதிப்படுத்த வேண்டும் என தலைவர் மர்ஹூம் அஸ்ரப் அவர்கள் கோரிக்கை வைத்திருந்தால் இன்று எம்நிலை இந்தளவு மோசமாகியிருக்காது
ஆனால் இவைகளைவிட எமது சமூகத்துக்கான முகவரி முக்கியமானது என்பதில் தலைவர் மர்ஹூம் அஸ்ரப் அவர்கள் அதிககரிசனை எடுத்துக்கொண்டதால் இதற்கு நேரம்கிடைக்காமல்கூட போயிருக்கலாம். இப்போது உள்ளநிலையில் இவைகள் சாத்தியமில்லாமையினால் கரையோர மாவட்டத்தின் அவசியத்தை நாம் சிந்திக்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்
ஒருசிலர் கூறலாம் அதாவது கரையோர மாவட்டத்தைவிட அரசாங்க அதிபராக ஒரு தமிழ் பேசுபவரை நியமித்தால் சரிதானே என்று, இவைகள் நடைமுறையில் சாத்தியமற்றதாகவே காணப்படுகின்றது. ஆகவே கரையோர மாவட்டம் உருவாகுவதென்றால் அது வெறும் மனித பரம்பலை அல்லது தமிழ் முஸ்லிம் பிரதேச செயலக எல்லைகளை மாத்திரம் கொண்டதாக அமையமுடியாது.
ஆட்சி என்பதற்குள் நிலம் பிரதானமானதாகும் இம்மாவட்டத்தில் வாழுகின்ற இனமக்கள் விகிதாசாரத்துக்கேற்ப நிலம் வர்தமானிமூலம் அறிவிக்கப்படவேண்டும் அத்தோடு ஏனையவைகள் பேசித்தீர்மானிக்கபட வேண்டும். இதற்கு தலைவர்கள் தேர்தல்கால கோசங்களாக இல்லாமல் ஆக்கபூர்வமான செயற்பாடுகளுக்கு முன்வரவேண்டும்
அதாவது எமது கையில் கரையோரமாவட்டம் எவ்வாறு இருக்கவேண்டும் என்ற திட்டவரைவு இருக்க வேண்டும் அதனை ஒவ்வொரு துறைசார்ந்த நிபுனர்கள்குழுவின் மூலம் வரையப்படவேண்டும் உதாராணமாக நீர்பாசனம்தொடர்பாக அதிலுள்ள பொறியியலாளர்கள் குழுவை உருவாக்கவேண்டும், காணிகள் தொடர்பாக அதில் சிறந்தமுறையில் அனுபவமுள்ள நிலஅளவையாளர்கள் உட்பட நிபுணத்துவம் வாய்ந்தவர்களை உள்வாங்க வேண்டும்.
அதேபோன்று எல்லாத்துறைகளுக்கும் வெவ்வேறாக குழுக்கள் அமைக்கப்பட்டு கரையோர மாவட்டத்தின் திட்ட வரைபு உருவாக்கப்பட வேண்டும். கரையோர மாவட்டத்தின் முகவெத்திலையாக உள்ள கல்முனையில் கச்சேரியை கொண்டுவருவதா? இல்லை கரையோரப்பகுதிக்கெல்லாம் மையமாகவுள்ள அக்கரைப்பற்றுக்கு கொண்டுவருவதா? என்பதனை பின்னர் யோசிக்கலாம் என்றார்.

0 comments:
Post a Comment