பிரதான செய்திகள்

கிண்ணியாவில் கட்டாக்காலி மாடுகளின் தொல்லை அதிகரிப்பு

கிண்ணியா நகர சபை எல்லைக்குட்பட்ட நகர சபையின் அருகாமையில் உள்ள விளையாட்டு மைதானம் கட்டாக்காலி மாடுகளினால் இரவு நேரங்களில் அசுத்தமாக்கப்படுவதாக விளையாட்டு வீரர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் குறித்த மைதானத்தினுள் கட்டாக்காலி மாடுகள் மலம் கழித்து விட்டு செல்வதனால் தாங்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக வீரர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை கிண்ணியா பிரதான வீதி வழியாக கட்டாக்காலி மாடுகளின் நடமாட்டம் இரவு நேரங்களில் கூட்டம் கூட்டமாக நடுவீதி வழியாக செல்வதனாலும் போக்குவரத்துக்கு இடைஞ்ஞலாக இருப்பதாகவும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இவ் விடயம் தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு பல தடவைகள் தெரியப்படுத்தியும் எவ் வித நடவடிக்கைகளும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை எனவும் மக்கள் அங்கலாய்க்கின்றனர்.

இதனால் வாகன விபத்துச் சம்பவங்கள் இடம் பெறுகின்றன. எனவே கட்டாக் காலி மாடுகளை உடன் கட்டுப்படுத்த கிண்ணியா நகர சபை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென பொது மக்கள் கேட்டுக் கொள்கின்றனர்.


 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment