(எம்.எம்.ஜபீர்)
வெசாக் வாரத்தை முன்னிட்டு சவளக்கடை பொலிஸ் நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மரவள்ளி கிழங்கு தானசாலை நேற்று (29) பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக நடைபெற்றது.
சவளக்கடை பொலிஸ் நிலையப் பெறுப்பதிகாரி ஏ.எம்.எம்.நஜீம் தலைமையில் நடைபெற்ற தானசாலை நிகழ்வில் அம்பாரை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் கே.நுவான் ஜே வதசிங்க, அம்பாரை உதவி பொலிஸ் அத்தியட்சகர் சூரியாராச்சி, கல்முனை தலைமை பொலிஸ் நிலையப் பெறுப்பதிகாரி ஜெ.கே.எஸ்.கே.ஜயநெற்றி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இதன்போது சமய தலைவர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், சிவில் பாதுகாப்பு உறுப்பினர்கள், பொது மக்கள் என பெரும் திரளானோர் கலந்து கொண்டனர்.
பொலிஸ் நிலைய வளாகம் வெசாக் கூடுகளினால் அலங்கரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment