சகோதர இனங்களுடன் நல்லிணக்கத்தைப் பேணிய சகவாழ்வின் அவசியம் குறித்து முஸ்லிம் சமூக முக்கியஸ்தர்களுக்கு விழிப்புணர்வூட்டுவது தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட செயலமர்வு ஏறாவூரில் நடைபெற்றது.
ஏனைய இனத்தவருடன் எவ்வாறு நல்லிணக்கத்துடன் சகவாழ்வு வாழவேண்டும் என்பது குறித்த விடயம் பற்றி இஸ்லாமிய வழிகாட்டலை சமூக மக்களுக்கு சமூக முக்கியஸ்தர்கள் மூலமாக அறிவூட்டும் நோக்கத்துடன் இச்செயலமர்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
உலமா சபையின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் மௌலவி எஸ்.எம். அலியார் ஹஸ்ரத் (பலாஹி) தலைமையில் ஏறாவூர் ஜாமிஎல் அக்பர் பள்ளிவாயல் மண்டபத்தில் நடைபெற்ற இச்செயலமர்வில் உலமா சபையின் ஏறாவூர்க்கிளைத்தலைவர் மௌலவி எம்.எஸ்.எம். நிராஸ் , பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தலைவர் மௌலவி எம்.எல்.ஏ. வாஜித் ஓட்டமாவடி, வாழைச்சேனை, காத்தான்குடி மற்றும் ஏறாவூர் ஆகிய பிரதேசங்களைச்சேர்ந்த சமய சமூக மற்றும் பிரதேச முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.
மௌலவி ஏ.பி.எம். முஸ்தபா (இஸ்லாஹி) இங்கு ஆரம்ப உரையாற்றியதையடுத்து மௌலவி ஏ.பி.எம் அலியார் (றியாழி) எம்.எச். மின்ஹாஜ் முப்தி ஆகியோர் விளக்கவுரையாற்றினர்.

0 comments:
Post a Comment