அக்கரைப்பற்று பிரதேச சபையின் அதிகார எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மாட்டிறைச்சியின் விலையை நூறு ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.
அக்கரைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.றாசிக்கின் அதிரடி நடவடிக்கையின் பிரகாரமே மாட்டிறைச்சியின் விலை குறைக்கப்பட்டது.
இதன் பிரகாரம் அப்பகுதிகளில் 900 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்ற ஒரு கிலோ கிராம் இறைச்சியின் விலை 800 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது. பொது மக்களின் நலன்களை கருத்தில் கொண்டே தவிசாளர் இந்த நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளார்.
நீண்ட காலமாக 900 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்ற ஒரு கிலோ கிராம் இறைச்சியின் விலை திடிரென 100 ரூபாவினால் குறைக்கப்பட்டதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் மற்றும் உறுப்பினர்களுக்கு அப்பிரதேச மக்கள் நன்றி தெரிவித்துவருகின்றனர்.

0 comments:
Post a Comment