பிரதான செய்திகள்

பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தினால் எவ்வித நன்மைகளும் கிடையாது: பிரதி அமைச்சர் பைசல் காசீம்

(றியாஸ் ஆதம்)

பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டங்களை நடாத்துவதனால் மக்களுக்கும், சமூகத்திற்கும் எந்தவிதமான நன்னைகளும் கிடையாது என நிந்தவூர் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவரும், பிரதியமைச்சருமான பைசால் காசிம் தெரிவித்தார்

நிந்தவூர் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் (27) நிந்தவூர் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டங்களை நடாத்துவதனால் மக்களுக்கும், சமூகத்திற்கும் எந்தவிதமான நன்னைகளும் கிடையாது. இக்கூட்டங்களில் முன்வைக்கப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளும் கிடைப்பதில்லை. அத்துடன் குறித்த கூட்டத்தில் சம்மந்தப்பட்ட அதிகாரிகளும் கலந்துகொள்வதில்லை. இதனால் பிரச்சினைகளை பேசி தீர்வு கானமுடியாது.

நான் சுமார் 13வருடங்களாக பிரதேச ஒருங்கிணைப்புக் குழு தலைவராக இருக்கத்தக்க இக்கூட்டங்காளால் நடைபெற்றது ஒன்றுமே இல்லை. ஆகவே இக்ககூட்டத்தினை மூன்று மாதங்களுக்கொரு முறை கூட்டினால் நல்லது என தோன்றுகிறது.

இங்கு நடாத்தப்படுகின்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டங்கள் சும்மா கூடிக்கலைகிறதே தவிர வேறு ஒன்றுமில்லை. இதேபோன்று நாங்கள் அம்பாரை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டங்களில் பேசிய விடயங்களுக்கு எந்தவிதமான முடிவுகளுமில்லை.

நிந்தவூர் பிரதேசத்தில் நீண்ட காலமாக யானை பிரச்சினை காணப்படுகிறது. இதனால் பல அழிவுகளும், சேதங்களும் ஏற்படகிறது. இந்தவிடயமாக ஒவ்வொரு கூட்டத்திலும் பெசப்படுகிறது. இதற்கு அதுதொடர்பான அமைச்சு முன்னெடுத்த நடவடிக்கைகள் தான் என்ன? ஒன்றுமே இல்லை என பிரதி அமைச்சர் பைசல் காசீம் தெரிவித்தார்.

எனவே, இதுதொடர்பில் ஜனாதிபதி, மற்றும் ஜனாதிபதியின் செயலாளருக்கு அறிவிக்குமாறு பிரதி அமைச்சர் பைசல் காசீம் நிந்தவூர் பிரதேச செயலாளருக்கு உத்தரவிட்டார்.



 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment