குறித்த தனியார் தொலைத் தொடர்பு கோபுரத்தால், அட்டாளைச்சேனை, 11ஆம் பிரிவின் மக்காமடி வீதிக் குடியிருப்பாளர்கள் உட்பட அதனைச் சுற்றியுள்ள மக்கள், பல்வேறு அசௌகரியங்களுக்கும் சுகாதார அச்சுறுத்தலுக்கும் உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அம்மகஜரில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
அட்டாளைச்சேனை இளைஞர் கழகங்கள், மகளிர் அமைப்புகள், விளையாட்டுக் கழகங்கள் மற்றும் கிராம அபிவிருத்திச் சங்கங்கள் என்பன இணைந்து, பொதுமக்களின் கையெழுத்தையும் பெற்று, இவ்வேலைத்திட்டத்தைத் தடுத்து நிறுத்துமாறு, கோரிக்கை விடுத்துள்ளது.
சன நெருசல் மிக்க இப்பிரதேசங்களில் பாரியளவிலான தொலைத் தொடர்பு கோபுரங்கள் அமைப்பதற்கு, தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு மற்றும் மத்திய சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபை அனுமதி வழங்கி இருப்பது கண்டிக்கத்தக்க விடயமாகும் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

0 comments:
Post a Comment