அட்டாளைச்சேனை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் (27) பிற்பகல் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தை நவீன முறையில் அபிவிருத்தி செய்வதற்காக பெருமளவு பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள போதிலும் வேலை ஒப்பந்தாக்காரரின் அசமந்தப் போக்கின் காரணமாக அந்தப்பணம் மீண்டும் அரசாங்கத்துக்கு திரும்பிச் செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இவ்வேலைத்திட்டம் தொடர்பில் அட்டாளைச்சேனை பிரதேச சபை மற்றும் அதற்குப் பொறுப்பான அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காமையே இந்த அவல நிலைக்கு காரணமாகும். குறித்த வேலை ஒப்பந்தக் காராரினால் 10 மில்லியன் ரூபாய்க்கான வேலை மாத்திரமே முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றார்.
இதேவேளை அட்டாளைச்சேனை 5ஆம், 9 ஆம் பிரிவுகளின் ஊர்க்கரை வாய்க்கால் வடிச்சல் திட்டம் மற்றும் பாதை சீர்கேடு, வடிகான் பிரச்சினைக்கு உரிய தீர்வினை இந்த ஆண்டில் வழங்க வேண்டும். மழை காலத்தில் இப்பிரதேச மக்கள் எதிர் நோக்கும் அவநிலையை போக்குவதற்கு அனைவரும் கூட்டுப் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.
கடந்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய கொங்கிரீட் வீதிகளுக்கு தார் பூசும் நடவடிக்கையை வீதி அபிவிருத்தி திணைக்களம் முன்னெடுக்கவில்லை. இதற்கான நடவடிக்கையை எடுப்பதுடன் இக் கூட்டத்திற்கு சமூகம்கொடுக்காத வனஜீவராசிகள் திணைக்களத்தின் அதிகாரிகள் பற்றியும் உரிய அதிகாhரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.
மேலும் அட்டாளைச்சேனை பிரதேசத்திற்குட்பட்ட அட்டாளைச்சேனை, பாலமுனை ஒலுவில், தீகவாபி, திராய்க்கேணி ஆகிய பிரதேசங்களின் வீதிகளுக்கு மிக நீண்டகாலமாக பெயர் பலகை இல்லாதது பெரும் குறையாகவே உள்ளது. இதனை நிவர்த்திக்க பிரதேச சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் இதன் போது தெரிவித்தார்.
இதேவேளை அரசாங்க திணைக்களுக்குத் தேவையான காணியை பெற்றுக் கொள்ளும் வகையில் சம்புக் களப்பு பிரதேசத்தில் 20 ஏக்கர் காணியை சுவீகரிப்பதற்கான நடவடிக்கையை நகர திட்டமிடல் அமைச்சின் நிதியொதுக்கீட்டின் மூலம் மேற்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
யானை வேலி அமைத்தல், ஒலுவில், தீகவாபி வீதியை புனரமைத்தல், வீதி மின்விளக்குகளைப் பொருத்துதல் மற்றும் அட்டாளைச்சேனை மீன்சந்தை அமைத்தல், கொட்டுப்பாலம் அமைத்தல், எல்.ஆர். சி காணிப்பிரச்சினைக்கு குழுவொன்றை அமைத்து அது தொடர்பான தீர்வினை வழங்குதல் போன்ற பிரச்சினைகள் தொடர்பில் இதன் போது ஆராயப்பட்டன.
பிரதேச அபிவிருத்தி குழுக் கூட்டங்களில் எடுக்கப்படும் தீர்மானங்கள் சரியான முறையில் நிறைவேற்றப்படுவதில்லை என அட்டாளைச்சேனை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவரும், பிரதியமைச்சருமான பைசால் காசிம் தெரிவித்தார்.
பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நிறைவேற்றப்படும் அபிவிருத்தி திட்டங்கள் சரியான முறையில் மக்களிடம் சென்றடையக் கூடிய வகையில் அதிகாரிகள் செயற்படுவதுடன், எடுக்கப்படும் தீர்மானங்களை அதிகாரிகள் நிறைவேற்ற வேண்டுமென்ரார்.
சுகாதார, சுதேச வைத்தியத்துறை பிரதியமைச்சர் பைசால் காசிம் மற்றும் கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நஸீர் மற்றும் பிரதேச செயலாளர் ரீ.ஜே.அதிசயராஜ், திணைக்களத் தலைவர்கள், அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள புதிய உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

0 comments:
Post a Comment