பிரதான செய்திகள்

இனவாத அக்கறை கொண்ட அதிகாரிகளினால் ஏறாவூர் விவசாயிகள் புறக்கணிக்கப்படுகின்றனர்: எம்.எஸ்.சுபையிர்

1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் தமது பூர்வீக இருப்பிடங்களை விட்டு வெளியேற்றப்பட்ட ஏறாவூர், பதுளை வீதிப் பகுதி விவசாயிகள், மீண்டும் தமது சொந்தக் காணிகளில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட முடியாதவாறு, அதிகாரிகள் தடை விதித்திருப்பது அடிப்படை உரிமை மீறலாகும் என கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரும், தற்போதைய ஏறாவூர் நகர சபை உறுப்பினருமான எம்.எஸ். சுபையிர் தெரிவித்தார்.

மேற்படி விடயம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத்தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இதனை நான் ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டு வந்ததன் பிரகாரம், தமது விவசாயக் காணிகளுக்குரிய வருடாந்தம் புதுப்பிக்கின்ற அனுமதிப்பத்திரங்களை அதிகாரிகள் புதுப்பித்துத் தர மறுப்பது ஓர் இனச்சுத்திகரிப்பான நடவடிக்கையாகவே பார்க்கப்பட வேண்டியுள்ளது.

சுமார் 3,500 ஏக்கர் விவசாயக் காணிகள், இவ்வாறு கபளீகரம் செய்யப்பட்டிருப்பது பற்றி ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டுசென்றுள்ளேன். சுமார் 10,500 குடுமப்ஙகள் வாழும் ஏறாவூர் நகர பிரதேசத்தில் மாத்திரம் சுமார் 3,500 குடும்பங்களுக்கு வாழ்வதற்கான நிலமின்றி அவஸ்தைப் படுகின்றார்கள்.

இதனால் பல்வேறுபட்ட உடல் உபாதைகளுக்கும் மன நெருக்கீட்டுக்கும் மக்கள் முகங்கொடுத்து வருகின்றார்கள், மேலும் சன அடர்த்தி காரணமாக தொற்று நோய்த் தாக்கம், சூழல் மாசுபாடு என்பன ஏற்படுகின்றன.

இந்த நாட்டுப் பிரஜையொருவருக்கு வாழ்வதற்கு ஒரு துண்டுக் காணியைக் கொண்டிருப்பது அவரது அடிப்படை மற்றும் மனித உரிமையாக ஏற்று அங்கிகரிக்கப்பட்டிருக்கின்றது. இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம்கள் காணியற்ற நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டிருப்பது வெளிப்படையான அநீதியாகும்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் சுமார் 2500 கிலோமீற்றர் மொத்த சதுர நிலப்பரப்பில் சுமார் 8 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பிலேயே முஸ்லிம்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இது குறித்து ஜனாதிபதியும் பிரதமரும், மற்றும் மனித உரிமை அமைப்புக்களும் கவனத்திற்கொள்ள வேண்டும்.

ஏறாவூர் விவசாயிகள் இனவாத அக்கறை கொண்ட அதிகாரிகளால் புறக்கணிக்கப்படுவது வெளிப்படையான உண்மையாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment