பிரதான செய்திகள்

க.பொ.த சாதாரண தர பெறுபேற்றில்: தேசிய ரீதியில் 6மாணவர்கள் முதலிடம்

2017ஆம் ஆண்டு கல்வி பொதுதராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் நேற்று நள்ளிரவு வெளியிடப்பட்டுள்ளமைக்கு அமைவாக அகில இலங்கை ரீதியில் 6 மாணவர்கள் முதலிடத்தைப் பிடித்துள்ளனர்.

அத்துடன், 9 மாணவர்கள், இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளதுடன், தமிழ்மொழி மாணவர்களுள் யாழ்- வேம்படி மகளிர் கல்லூரி மாணவி மிருனி சுரேஸ்குமார் முதலாம் இடத்தைப் பிடித்துள்ளார்.

இதில் முதலிடங்களைப் பிடித்த மாணவர்கள் 6 பேரில் இருவர் கம்பஹா ரத்னாவலி மகளிர் பாடசாலையைச் சேர்ந்தவர்களாவர்.

எஸ்.எம்.கசுனி ஹன்சிகா தத்சரனி செனவிரத்ன : கம்பஹா ரத்னாவலி மகளிர் வித்தியாலயம்

ஏ.சமோதி ரவீசா சுபசிங்க : கம்பஹா ரத்னாவலி மகளிர் வித்தியாலயம்

நவோத்யா பிரபாவி ரணசிங்க : கண்டி மகளிர் உயர் பாடசாலை

லிமாஷா அமந்நி  திவ்யன்ஜன விமலவீர : கண்டி மஹ மாயா மகளிர் பாடசாலை

எம்.பி.ரந்தி லக்பிரியா : மாத்தறை சுஜாதா வித்தியாலயம்

ஏ.எம்.கவீஷ பிரபாத் : இரத்தினபுரி சீவலி மத்திய கல்லூரி

 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment