பிட்டகோட்டேயில் அமைந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நம்பிக்கையில்லாப் பிரேரணை தகுந்த விடயமல்ல. ஆகவே, நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் கூறியுள்ளார். இதன்படி கட்சியின் பொதுச்செயலாளரின் நிலைப்பாடே உறுதியானது.
இதன்படி கட்சியின் பொதுச்செயலாளர் வேறொரு நிலைப்பாட்டையும் கட்சியின் தலைவர் என்றவகையில் ஜனாதிபதி வேறு நிலைப்பாட்டையும் வகிக்க முடியாது. ஜனாதிபதியின் நிலைப்பாடு பொதுச்செயலாளர் மூலமாகவே வெளியாகும். ஏனையோர் எதனையும் கூறலாம். அது அவர்களது தனிப்பட்ட கருத்துகளாகும். சுதந்திரக் கட்சியில் உள்ள கருத்து வேறுபாடுகளை கட்சிக்குள்ளே தீர்க்க வேண்டும். ஜனாதிபதி அனைவரையும் அழைத்து கட்சியினரின் நிலைப்பாட்டை பெற வேண்டும்.
தெஹிவளை, கல்கிஸை மாநகர சபையிலும் நாம் தோல்வி அடைவதற்கும் சுதந்திரக் கட்சியினரே பிரதான காரணமாகும். ஆரம்பத்தில் எமக்கு ஆதரவாக வாக்களிப்பதாக உறுதியளித்தனர். அதன்பின்னர் பொதுஜன முன்னணிக்கு வாக்களித்தனர். ஆகவே, சுதந்திரக்கட்சியில் மஹிந்த அமரவீர ஒரு கருத்தையும் துமிந்த திஸாநாயக்க இன்னுமொரு கருத்தையும் முன்வைக்கின்றனர்.
ஆகவே ஒரு நிலைப்பாட்டுக்கு சுதந்திரக் கட்சியினர் வர வேண்டும். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தீர்மானத்திற்கு நாம் கட்டுப்பட்டு ஒரு தீர்மானத்திற்கு வருகின்றோம். எனினும் சுதந்திரக் கட்சிக்குள் அவ்வாறு தலைவருக்கு கட்டுப்படுவதாகவோ அல்லது ஒரு தீர்மானத்தை எடுப்பவர்களாக இல்லை. சுதந்திரக் கட்சியில் உறுதியான நிலைப்பாடு இல்லை.
இது அரசாங்கத்திற்கு எதிராக முன் வைக்கப்படும் நம்பிக்கையில்லா பிரேரணையாகும். இந்நிலையில் இதனை தோற்கடிப்பது நகைச்சுவையான செயற் பாடாகும். தமது கழுத்தை தானே அறுத்துக் கொள்ளும் செயற்பாடாகும் என்றார்.

0 comments:
Post a Comment