பிரதான செய்திகள்

TMVP உறுப்பினர்கள் கிழக்கு மாகாண ஆளுநர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து உள்ளுராட்சி மன்றங்களுக்கு தெரிவான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உறுப்பினர்கள் கிழக்கு மாகாண ஆளுநரின் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.

மேற்படி சத்தியப்பிரமாண நிகழ்வு மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் தலைமையில் இன்று (31) நடைபெற்றது.

கிழக்கு மாகாண ஆளுனர்  ரோஹித்த போகொல்லாகம பிரதம அதிதியாக கலந்துகொணட இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தின் 11 உள்ளூராட்சி மன்றங்களைச் சேர்ந்த 36 உறுப்பினர்கள் இதன்போது சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்.

இந் நிகழ்வில் கிழக்கு மாகாண  முதலமைச்சின் செயலாளர் யூ எல் ஏ அசீஸ், கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் வை.சலீம், மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி ஆணையாளர் கே.சித்திரவேல், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் பிரதித் தலைவர் நா.திரவியம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment