இறக்காமம் பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளர்களை தெரிவு செய்யும் முதலாவது அமர்வு (28) சபை மண்டபத்தில் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம்.வை.சலீம் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது தவிசாளரை தெரிவு செய்யுமாறு உள்ளூராட்சி ஆணையாளரினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கினங்க ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர் கலீலுர் ரஹ்மான் மற்றும் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் ஜெமில் காரியப்பரினதும் பெயர் பரிந்துரைக்கப்பட்டது
இதற்கினங்க நடாத்தப்பட்ட பகிரங்க வாக்கெடுப்பின் மூலம் கலீலுர் ரஹ்மானுக்கு 8வாக்குகளும், ஜெமில் காரியப்பருக்கு 5வாக்குகளும் அளிக்கப்பட்டது. கூடுதலான வாக்குகளைப் பெற்ற கலீலுர் ரஹ்மான் சபையில் தவிசாளராக அறிவிக்கப்பட்டார்.
அதனைத்தொடர்ந்து பிரதி தவிசாளராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் மௌலவி நௌபர் 8 வாக்குகளைப் பெற்று பிரதித் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் இணைந்தே, இறக்காமாம் பிரதேச சபையில் இந்தக் கூட்டு உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment