சாய்ந்தமருது பிரதேசமும் சூழலும் எனும் தலைப்பில் சாய்ந்தமருது உதவி பிரதேச செயலாளர் ஏ.எம். ரிக்காஸ் தலைமையில் டெங்கு தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் நேற்று பிரதேச கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.
கல்முனை மாநகர சபைக்குற்பட்ட சாய்ந்தமருது பிரேதேசத்தில் டெங்கு நோய் வேகமாக பரவிவருவதை கட்டுப்படுத்துவதற்காக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தின் அறிவுறுத்தலுக்கு அமைவாகவும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது.
சாய்ந்தமருது பிரதேசத்தில் இவ்வருடத்திற்குள் ஜனவரி மாதம் தொடக்கம் ஏப்ரல் வரையிலான காலப்பகுதிக்குள் இதுவரை 88 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் இந்நிலை தொடருமாக இருந்தால் மிக மோசமான விளைவினை எதிர் நோக்கலம் எனும் அச்சத்தில் பிரதேசத்தில் அதிகரித்துக் காணப்படும் டெங்கு நுளம்புத் தாக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் சாய்ந்தமருது பிரதேச வீடுகளில் தேங்கியிருக்கும் சிரட்டைகள், பிளாஸ்டிக் மற்றும் திண்மக் கழிவுகளை அகற்றும் நடவடிக்கையினை சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், கல்முனை மாநகர சபையுடன் இணைந்து செயட்படுத்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
இந்நிகழ்வில் டெங்கு பெருக்கம், அதனை கட்டுப்படுத்தல் தொடர்பாக கலந்து கொண்டோருக்கு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தின் வைத்திய கலாநிதிகள், சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி, பொலிஸ் நிலைய சுகாதார பிரிவு பொருப்பதிகாரி ஆகியோரினால் விளக்கமளிக்கப்பட்டு கூடுதலாக டெங்கு பரவும் இடத்தை அடையாளப்படுத்தி எதிர்வரும் மாதம் 07,08ம் திகதிகளில் பிரதேசத்தை துப்பரவு செய்து நடைமுறைப்படுத்துவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
கல்முனை மாநகர சபை உத்தியோகத்தர்கள் பொதுச் சுகாதார பரிசோதரகர்கள், கிராம சேவகர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், பொருளாதார உத்தியோகத்தர்கள், மற்றும் பல பிரமுகர்களும் பங்கேற்றிருந்தனர்.

0 comments:
Post a Comment