அட்டாளைச்சேனை பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் எதிர்வரும் 27ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2மணிக்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளதாக அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ரீ.ஜே.அதிசயராஜ் தெரிவித்தார்.
மேற்படி ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் பிரதி சுகாதார அமைச்சர் பைசல் காசீம் மற்றும் கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை ஆகியோரின் இணைத்தலைமையில் இடம்பெறவுள்ளது.
இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள், திணைக்களத் தலைவர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப்பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.
இதன்போது அட்டாளைச்சேனை பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் எதிர்கால செயற்திட்டங்கள் குறித்தும் விரிவாக ஆராயப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment