அக்கரைபற்று மநாகர சபைக்கு தேசிய காங்கிரஸ் கட்சி மூலம் போட்டியிட்டு தெரிவு செய்யபட்ட காதிரியா வடக்கு மற்றும் தெற்கு வட்டார உறுப்பினர்களான அப்துல் அஸீஸ் JP மற்றும் எம்.சீ.எம்.யாஸீர் ஆகியோரின் சத்தியபிரமாண நிகழ்வு சட்டத்தரணிகளான அகமட் ரத்திப், றுஸ்தி ஹஸன் மற்றும் காதிரியா பிராந்திய பெண் சட்டத்தரணியான ஏ.எல். அஸ்மியா ஆகியோரின் முன்னிலையில் நேற்று (25) இடம் பெற்றது.
இதில் அக்கரைபற்று ஐம்மியத்துல் உலமா சபை செயலாளர் மௌலவி ஹபீப், காதிரியா ஐூம்மா பள்ளிவாயல் நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்கள், சமூக சேவை அமைப்புகளின் பிரதிநிதிகள், பிரதேச முக்கியஸ்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
கிழக்கு மாகாண ஆளுநர் முன்நிலையில் தேசிய காங்கிரஸின் உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்த போது மேற்படி இரு உறுப்பினர்களும் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேயர் மற்றும் பிரதி மேயர் தெரிவின் போது குறித்த இரு உறுப்பினர்களும் கட்சித்தலைவருடன் முரண்பட்டுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்
0 comments:
Post a Comment