திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமான முறையில் கைக்குண்டு மற்றும் துப்பாக்கியொன்றினையும் தம்வசம் வைத்திருந்த நபர் ஒருவரை இம்மாதம் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் எம்.எச்.எம்.ஹம்ஸா நேற்று (3) உத்தரவிட்டார்.
திருகோணமலை, மிகுந்துபுர பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் நீண்ட காலமாக வேட்டையாடி வருவதாகவும், ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் திருகோணமலை தலைமையக குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேக நபரின் வீட்டினை சோதனை மேற்கொண்ட போது சட்டவிரோதமான முறையில் கைக்குண்டு ஒன்றினையும், துப்பாக்கியொன்றினையும் வைத்திருந்த நிலையில் கைப்பற்றியதோடு,சந்தேக நபரையும் வெள்ளிக்கிழமை (2) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபரை பொலிஸார் திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

0 comments:
Post a Comment