பிரதான செய்திகள்

மக்களுக்காக சிறை செல்ல தயாராகவே உள்ளேன் SM சபீஸ்

ஆலயடிவேம்பு DS என்னை கைதுசெய்யவேண்டுமென ஆர்பாட்டம் பண்ணியுள்ளார்.

அன்று அக்கரைப்பற்று நீர்வழங்கள் பிராந்தியகாரியாலயத்தை உடனடியாக பிரித்துக்கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளை தடுத்துநிறுத்த எத்தனித்தபோது என்னை வீட்டுக்காவலில் வைத்தார்கள் வெளியிறங்கினால் குறித்த சட்டத்தின்கீழ் கைதுசெய்து அடைப்போம் என்றார்கள்.

மக்களுக்காகவே நாங்கள் முடிந்ததை செய்யுங்கள் எதுனடப்பினும் போராட்டம் நடக்கும்  ஆனால் காவல்துறை மக்களின் உரிமையின்  பக்கமா இல்லை காடையர்களின் பக்கமா  என்பதனை நாளை பாப்போம் என்றோம்.

எங்களது  கோளைகளற்ற இளைஞர்கள், வீரம் நிறைந்த வாலிபர்கள், மண்ணை நேசித்து உரிமைக்காக போராடும் சகோதரர்களின் உதவியோடு வெற்றியும் கண்டோம் அல்ஹம்துலில்லாஹ்.

இன்று அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் தொலைபேசியினூடாக தொடர்பு கொண்டதன் பிற்பாடு அக்கரைப்பற்று மாநகர ஆணையாளர் பொறியியலாளர் மற்றும் தொழிலாளர்கள் உட்பட வாகனங்களும் சென்று முகத்துவாரத்தை அகழும் பணியை ஆரம்பிக்கும்போது திடிரனே துப்பரவு பணிகளில் ஈடுபடவேண்டாம் என ஆலயடிவேம்பு DS மாநகர ஆணையாளரை வேண்டிக்கொண்டார்.

ஆணையாளர் அக்கரைப்பற்று மக்களின் வீடுகள் நீரில் மூழ்கியுள்ளது முகத்துவாரத்தை வெட்டி அகழாவிட்டால் இன்னும் நிலமை மோசமாகும் மழைக்காலம் வேற ஆரம்பமாகியுள்ளது என்று மன்றாட்டமாக கோறியும் செவிசாய்க மறுத்தார் ஆலையடி வேம்பு DS

இதனை எதிர்த்து கேள்வி கேட்டதற்கு என்னை கைதுசெய்து தண்டனை வழங்க வேண்டும் என ஆர்பாட்டம் நடத்தி மகஜர் கையளித்துள்ளனர்.

இவர்களுக்கு பயந்து வீடுகளில் அடங்கிக்கிடப்போம் என்று நினைத்துவிட்டார்கள் போலும் உங்களது அநீதிக்கு எதிராக எங்களது குரல்கள் ஒலித்தவன்னமே இருக்கும் என சபீஸ் தெரிவித்தார்.

 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment