பிரதான செய்திகள்

காவத்தமுனை தாருல் றஃமத் பாடசாலை மாணவி 100 மீட்டர் ஓட்டப்போட்டியில் முதலாமிடம்

மாற்றுத் திறனாளிகளுக்கான 2017ஆம் ஆண்டுக்கான கிழக்கு மாகாண தமிழ் பரா விளையாட்டுப் போட்டி 05.08.2017 மற்றும் 06.08.2017ஆம் திகதிகளில் மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

இதன்போது கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலக நிருவாக எல்லைக்குட்பட்ட காவத்தமுனை தாருல் றஃமத் விஷேட தேவையுடையோர் பாடசாலை மாணவியான ஏ.ஆர்.எப். அஸ்மியா 100 மீட்டர் ஓட்டப்போட்டியில் முதலாமிடத்தினைப் பெற்றுக்கொண்டார், இவருக்கான சான்றிதழ் 30.11.2017ஆம்திகதி வழங்கி வைக்கப்பட்டது.

இம்மாணவி முதலாமிடத்தினைப் பெற்றக்கொள்ள பயிற்றுவித்த ஆசிரியைகளுக்கும், முதலாமிடத்தினைப் பெற்ற மாணவிக்கும் இப்பாடசாலையின் அதிபர் நெய்னா முஹம்மத் தனது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டார்.
 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment