பிரதான செய்திகள்

மோட்டார் சைக்கிள் பெற்றுக்கொடுக்காத அரசியல்வாதிகள் உரிமைகளை பெற்றுக்கொடுப்பார்களா..? அம்பாறை அரச உத்தியோகத்தர்களே அவதானம்

மகிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களினால் 2014ஆம் ஆண்டிற்கான வரவு செலவு முன்மொழிவுத்திட்டத்திற்கமைவாக நாட்டில் உள்ள அனைத்து அரச வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கும் சலுகை அடிப்படையில் (50000ரூபா) மோட்டார்; சைக்கிள்கள் வழங்கப்பட்டு வந்தன.

அனுராதபுரத்தில் தொடங்கிய ஆரம்பம் அதனைத் தொடர்ந்து மாத்தளை பொலநறுவை எனத் தொடங்கி நாட்டின் அம்பாறை மாவட்டத்தைத் தவிர ஏனைய அனைத்து மாவட்டத்திலும் கடமை புரியும் வெளிக்கள அரச உத்தியோகத்தர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் இதுவரையும் அம்பாறை  மாவட்டத்தில் கடமை புரியும் வெளிக்கள அரச உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படாமையினால்  அரச வெளிக்கள உத்தியோகத்தர்கள் மிகுந்த கவலையும் மன உளைச்சலும் கொண்டுள்ளனர்.

ஏனைய மாவட்ட அரச வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட சலுகை அடிப்படையிலான மோட்டார் சைக்கிள்கள்; அம்பாறை  மாவட்ட அரச வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என  அம்பாறை மாவட்ட அனைத்து அரச வெளிக்கள உத்தியோகத்தர்கள் சங்கம் பல தடவைகள் வேண்டுகோள் விடுத்தும் எந்நவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

இற்றைவரை மூன்று வருடங்கள் கடந்துள்ள நிலையில் செவிடன் காதில் ஊதிய சங்காகவே அரசியல்வாதிகள் இருந்து வருகின்றனர். தபால் வாக்குகளுக்குக்காக அரச உத்தியோகத்தர்களிடம் மன்டியிடவேண்டிய காலம் கனிந்துள்ளதாக உத்தியோகத்தர்கள் தெரிவிக்கின்றனர்.
 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment