சிறியானி விஜேவிக்ரம மக்கள் ஐக்கிய முன்னணியில் இருந்து கொண்டு அரசாங்கத்துடன் இணைந்து கொண்டமைக்காக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு மக்கள் ஐக்கிய முன்னணியின் மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளது.
இன்று (15) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அந்தக் கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன மேற்கன்டவாறு தெரிவித்தார்.
கடந்த 09ம் திகதி வரவு செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களித்த அவர் பின்னர் அரசாங்கத்துடன் இணைந்து கொண்டமை தொடர்பில் சந்தேகம் இருப்பதாகவும், அது அரசாங்கத்தின் சதி திட்டத்தின் பிரதிபலனாக இருக்கலாம் என்றும் அவர் கூறினார்.
மக்கள் ஐக்கிய முன்னணியின் உறுப்பினராக இருக்கின்ற அவர் திகாமடுல்ல தொகுதியை பிரதிநிதித்துவம் செய்யும் பாராளுமன்ற உறுப்பினராக உள்ளார்.
மக்கள் ஐக்கிய முன்னணி சார்பாக கூட்டு எதிர்க்கட்சியுடன் இணைந்து இருந்த அவர் கடந்த 10ம் திகதி தற்போதைய ஜனாதிபதியின் வேலைத் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக கூறி அரசாங்கத்துடன் இணைந்து கொண்டார் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

0 comments:
Post a Comment