மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் இராஜாங்க அமைச்சராக ஶ்ரீயானி விஜேவிக்ரம நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் அவர் பதவியேற்றுக் கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.
இதன்போது மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவும் உடனிருந்துள்ளார்.
திகாமடுல்லை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஶ்ரீயானி விஜேவிக்ரம கூட்டு எதிர்க்கட்சியுடன் செயற்பட்டு வந்த நிலையில் அண்மையில் ஜனாதிபதியை சந்தித்து அரசாங்கத்துடன் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment