(யூ.கே.காலித்தீன்)
சாய்ந்தமருது பிரதேசத்தில் அதிகரித்துக் காணப்படும் டெங்கு நுளம்புத் தாக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் சாய்ந்தமருது பிரதேச வீடுகளில் தேங்கியிருக்கும் திண்மக் கழிவுகளை அகற்றும் நடவடிக்கையினை சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், கல்முனை மாநகர சபையுடன் இணைந்து இன்று (14) வியாழக்கிழமை சாய்ந்தமருது பிரதேச செயலகத்திற்கு முன்னால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எல். அஜ்வத் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.ஐ.எம்.ஹனிபா கல்முனை மாநகர சபை ஆணையாளர் ஜே.லியாகத் அலி, பொதுச் சுகாதார பரிசோதரகர்கள், கிராம சேவகர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், இளைஞர் அமைப்புகளின் பிரதிநிதிகளும் மற்றும் பல பிரமுகர்களும் பங்கேற்றிருந்தனர்.
சாய்ந்தமருது பிரதேசத்தில் உள்ள சகல வீதிகளிலும் ஒரே நேரத்தில் சேகரிக்கப்பட்ட திண்மக் கழிவுகள் அனைத்தும் வொலிவோரியன் ஐக்கிய பொதுமைதானத்திற்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் கொட்டப்பட்டு மண்நிரப்பப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இரு நாட்களைக் கொண்ட இவ்வேலைத் திட்டத்தை கல்முனை மாநகர சபையுடன் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை, பிரதேச செயலகம் என்பன இணைந்து முன்னெடுத்து வருகின்றது.
இதன்போது பெக்கோ இயந்திரங்கள் உட்பட 11 வாகனங்கள் முழு நாள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டு, ஊர் முழுவதும் பெரும் தொகையான கழிவுகள் சேகரித்து அகற்றப்பட்டன.

0 comments:
Post a Comment