(ஹஸ்பர் ஏ ஹலீம்)
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் திருகோணமலை மாவட்டத்தில் தனித்துப் போட்டியிடவுள்ளது. அதற்கான கட்டுப்பணத்தை அக்கட்சியினர் இன்று (11) திருகோணமலை உதவி தேர்தல் அத்தாட்சி அலுவலகத்தில் செலுத்தினர்.
கட்டுப் பணத்தை செலுத்தி வேட்பு மணுக்கான பத்திரத்தை திருகோணமலை மாவட்ட சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினரும் கட்சியின் திருமலை மாவட்ட அமைப்பாளருமான எம்.எஸ்.தௌபீக் பெற்றுக் கொண்டார்.
இதில் மாவட்டம் முழுதும் உள்ள நகர சபை, பிரதேச சபை உள்ளடங்குகின்றன. உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடவுள்ளோர் கட்சியின் தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டனர்

0 comments:
Post a Comment