பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீயானி விஜேவிக்ரம கூட்டு எதிர்க் கட்சியிலிருந்து விலகிச் செல்லவில்லையெனவும் கட்சியின் நடவடிக்கைகளே அவரை விலகிச் செல்ல வைத்ததாகவும் பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மம்பில எம்.பி. தெரிவித்தார்.
கொழும்பில் இன்று (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.
அவருக்கு எம்மிடமிருந்து செல்வதற்கு கொள்கையளவிலோ அல்லது மனக் கசப்புக்களோ இருக்கவில்லை. அம்பாறை மாவட்டத்தில் வேட்பாளர் பிரச்சினையை தீர்த்துக் கொள்ள தேசிய வேட்பாளர் தெரிவுக் குழுவுக்கு ஆறு முறைக்கும் மேல் சென்றுள்ளார். இறுதியாக கடந்த சனிக்கிழமை இரவு 12 மணிக்கும் பின்னர் தேசிய தெரிவுக் குழுவுக்கு வருகை தந்தார்.
“தலைவர்கள் என் மீது தப்பான கருத்துக் கொள்ள வேண்டாம். நான் இந்த வேட்பாளர் பிரச்சினையைத் தீர்க்காமல் எனது மாவட்டத்துக்கு செல்ல முடியாது. அவ்வாறு சென்றால் சிலவேளை உயிர் இழப்புக்கள் கூட நிகழலாம்” என ஸ்ரீயானி எம்.பி. கட்சித் தலைவர்களிடம் கூறினார்.
இவர் கூட்டு எதிர்க் கட்சியிலிருந்து செல்வதற்கு காரணமாக இருந்தவர்கள் யார் என்பதை தேர்தல் முடிந்த பின்னர் அறிவிப்போம் எனவும் கம்மம்பில எம்.பி. மேலும் குறிப்பிட்டார்.
மஹிந்த ராஜபக்ஷ ஆதரவு கூட்டு எதிர்க் எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தனவின் கட்சியைச் சேர்ந்த ஸ்ரீயானி விஜேவிக்ரம நேற்று மாலை (10) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்க தீர்மானித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

0 comments:
Post a Comment