மல்வானை உளஹிட்டிவளை பிரதேசத்தின் யுவதிகளுக்கு மேல் மாகாண சபை உறுப்பினர் ஷாபி றஹீமின் நிதி ஒதுக்கீட்டில் வழங்கட்டு வந்த சுயதொழில் பயிற்சியின் பின்னரான கண்காட்சியும் சான்றிதழ் வழங்கும் வைபவமும் கடந்த (09) ஆம் திகதி உளஹிட்டிவளை அல்-மஹ்மூத் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர் தம்பன் நானாவின் தலைமையில் சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உளஹிட்டிவள மகளிர் அணியின் அனுசரனையில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக மேல் மாகாண சபை உறுப்பினர் ஷாபி றஹீம் அவர்களும் கௌரவ அதிதியாக பியகம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் எஸ்.எம்.எஸ்.ஹசன் ஆகியோர் உட்பட தொழிலதிபர்களான முஹம்மட் உஷாம், போஹா அமீர் ஆகியோரும் யுவதிகளும் ஊர் பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இங்கு கைத்தொழில் பொருட்களான கேக், ஆடைகள் உட்பட்ட பொருட்கள் பயிற்சியாளர்களால் வடிவமைக்கப்பட்டு பார்வைக்கு வைக்கப்பட்டது.
நிகழ்வின் இறுதியில் இப்பயிற்சியில் பங்கு கொண்டு சிறப்பாக பூர்த்தி செய்த யுவதிகளுக்கான சான்றிதழ்களும் அதிதிகளால் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment