ஸ்ரீலங்கா ஹிரா பெளண்டேசனின் நிதிப்பங்களிப்புடன் இறக்காமம் வரிப்பத்தான்சேனை பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள மஸ்ஜிதுல் ரவ்ழா பள்ளிவாயலை திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று (13) புதன்கிழமை இடம்பெற்றது.
இந்நிகழ்வு ஸ்ரீலங்கா ஹிரா பெளண்டேசன் தலைவரும் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது சவூதி அரேபியாவை சேர்ந்த அஷ்செய்க் முகம்மட் அமீன் அப்துல் சமட் மர்ஹலானி மற்றும் ஸ்ரீலங்கா ஹிரா பெளண்டேசன் செயலாளர் நாயகம் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம்.மும்தாஸ் (மதனி) உட்பட உலமாக்கள், ஊர் மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

0 comments:
Post a Comment