எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு தேசிய காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிடவுள்ள வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வும், தேர்தல் தொடர்பான கலந்துரையாடலும் நேற்று (13) நடைபெற்றது.
இந்நிகழ்வு தேசிய காங்கிரஸ் கட்சியின் றகுமானியாபாத் மக்கள் பணிமனையில் கட்சியின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சருமான எம்.எஸ்.உதுமாலெப்பை தலைமையில் நடைபெற்றது.
இதன்போது எதிர்வரும் தேர்தலில் அட்டாளைச்சேனை பிரதேச வட்டாரங்களில் போட்டியிடும் 11வேட்பாளர்களும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டதுடன், வட்டார ரீதியாக தேர்தல் பணிகளை முன்னெடுப்பதற்கு குழுக்களும் நியமனம் செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் தேசிய காங்கிரசின் அட்டாளைச்சேனை மத்திய குழு மற்றும் தேர்தல் குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

0 comments:
Post a Comment