திருகோணமலை அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் டிப்பர் வாகனமொன்று மணிக்கூட்டு கோபுரத்தில் மோதியதில் அதன் சாரதி பலத்த காயங்களுடன் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்விபத்துச் சம்பவம் நேற்றிரவு (1) இடம்பெற்றுள்ளதாக அக்போபுர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அதிக வேகமும், சாரதியின் தூக்கமுமே விபத்துக்கு காரணம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்போபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments:
Post a Comment