புல்மோட்டைப் பிரதேசத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியை வளர்ப்பதில் முன்னின்று உழைத்தவர்களும், அக்கட்சியில் முக்கிய பதவிகள் வகித்தவர்களுமான முஸ்தபா ஆசிரியர் மற்றும் நப்ரிஸ் ஆசிரியர் மற்றும் lmsl staff அமீன் மற்றும் நிஐம் (sdf) உள்ளிட்ட பலரும் இன்று (2) ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்ரசில் இணைந்து கொண்டனர்.
முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், ஸ்ரீ.மு.காங்கிரஸ் திருகோணமலை தொகுதி அமைப்பாளரும் மற்றும் பிரதி சுகாதார அமைச்சரின் இணைப்பு செயலாளருமான ஆர்,எம்.அன்வரின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கட்சிப் போராளிகளின் முன்னிலையில் இவர்கள் இணைந்துகொண்டனர்.
இவர்கள் மு.கா தலைவர் ரவூப் ஹக்கீமை மிக விரைவில் சந்தித்து பேசவுள்ளனர். மேலும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் அதிருப்தியுற்ற பல உறுப்பினர்கள் எதிர்வரும் வாரங்களில் ஸ்ரீ.மு.காங்கிரசில் இனையவுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment